* என். பாஸ்கரன், கம்பம்.
என் இரண்டு மகள்களின் திருமணம், வேலை வாய்ப்பு பற்றிக் கூறவும்.
மூத்த மகள் பி. திரவியலட்சுமி 7-7-1996-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். ராசியில் கேது, 7-ல் ராகு. எனவே நாகதோஷம் உள்ளது. லக்னத்துக்கு 8-ல் உள்ள செவ்வாய் தோஷம் கொடுக்கிறது. சனி, ஏழாமதிபதி செவ்வாயைப் பார்ப்பதால், தாமத, இஷ்ட திருமணம் நடக்கும். நடப்பு கேது தசையில் ராகு புக்தி 2023, செப்டம்பர்வரை. இதில் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வேலை செய்யும் வாய்ப்பு வரும். அடுத்து கேது தசை குரு புக்தியில், 2024, ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரு திருமண வாய்ப்பு வரும். அது தட்டிப்போய்விட்டால் அடுத்துவரும் சுக்கிர தசையில்தான் திருமணம் நடக்கும்.
இவ்விதம் கேது தசை நடப்பவர்கள் கீழப்பெரும் பள்ளம் நாகநாத சுவாமியை வழிபடவும். அருகிலுள்ள கோவிலில் கேதுவுக்கு ஏழு தீபங்களை ஏற்றி வணங்கவும். விநாயகரை விடாமல் துதிக்க வும். இந்த ஜாதகி விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுதல் நன்று.
இளைய மகள் விஜயதாரணி 27-1-1999-ல் பிறந்தவர். மேஷ லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னத்துக்கு 7-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம் உள்ளது. மேலும் 7-ஆம் அதிபதி சுக்கிரன், இரு பாவகிரகங்களுக்கிடையே இருப்பதால், பாபகர்த்தாரி யோகம் பெறுகிறார். நடப்பு ராகு தசை. இதில் 2023 முதல் 2026 வரை சுக்கிர புக்தி. இதில் திருமணம், பதவி உயர்வு கிடைக்கும். இந்த ஜாதகப்படி எந்தவொரு வாய்ப்பு வந்தாலும் விடக்கூடாது. சட்டென்று முடித்துவிடவேண்டும்.
இவ்விதம் ராகு தசை சுக்கிர புக்தி நடப்பவர்கள் வெள்ளிக் கிழமைதோறும் துர்க்கையை வணங்கவேண்டும். மேலும் 7-ஆமிடத்தில் பாவர்கள் அமர்ந்திருக்கும் ஜாதகர்கள், திருமங்கலக்குடி சென்று தாமரைப்பூ மற்றும் நெய்தீபமேற்றி வழிபடுவது நன்று. இந்த ஜாதகி, அம்மன் தாலி வாங்கி காணிக்கை செலுத்தவேண்டும். சுமங்கலிக்கு புடவை, தாம்பூலம் அளிக்கவேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Q&A_39.jpg)
* எஸ். நிர்மலா, மதுரை-9.
எனது மகன் எஸ். ஹரிஹரசுதனின் திருமணம் எப்போது நடக்கும்? குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார். நல்ல வேலை எப்போது அமையும்?
ஹரிஹரசுதன் 26-6-1989-ல் பிறந்தவர். நாகதோஷம் உள்ளது. கடக லக்னம், மீன ராசி, உத்தரட்டாதி நட்சத்திரம். இவரது ஜாதகத்தில் பூர்வபுண்ணிய அதிபதி நீசம். உங்கள் முன்னோர் மற்றும் குலதெய்வத்துக்குச் செய்யவேண்டிய கடமைகளை சரிவர செய்தல் அவசியம். நடப்பு கேது தசையில் ராகு புக்தி 2023 நவம்பர்வரை நடக்கும். அடுத்துவரும் குரு புக்தியில்தான் திருமணம் நடக்கும். திருமணத்திற்குமுன் தாலிதானம் கண்டிப்பாகச் செய்யவேண்டும். கேது தசை முடியும்வரை பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும். அதன்பின்வரும் சுக்கிர தசை நல்ல பலன்களைத் தரும். இவ்விதம் கேது தசை நடப்பவர்கள் பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்க வேண்டும். மேலும் அருகிலுள்ள விநாயகர் கோவிலில், தீபமேற்றி வழிபடவும்.
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-10/Q&A-t_1.jpg)